புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : திங்கள், 14 ஜனவரி 2019 (15:35 IST)

ரிஷபம் - தை மாத பலன்கள்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் ராகு - ரண, ருண  ரோக, சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய், குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம் ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சனி  - பாக்கிய  ஸ்தானத்தில் கேது, சூர்யன் ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.
 
பலன்: இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த  செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். 
 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.   உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக  நீங்கள் அலையும் அலைச்சல் வெற்றி தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் -மனைவி ஒருவரை  ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
 
பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண்  அலைச்சல் ஏற்படும்.
 
கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் இருந்து வந்த  தொல்லைகள் தானாக விலகும். கண்கள்  உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.
 
அரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும்.  நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான  முன்னேற்றம் பெறும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்..
 
கார்த்திகை: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து  செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும். தாய்,  தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.
 
ரோகினி: இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி  இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து  செல்வது நன்மை தரும்.
 
மிருகசீரிஷம்: இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி  அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்,  சொத்து  வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி  உண்டாகும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி1, 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 25, 26,  27.